தல பெருமை விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குவது ஈச்சனாரி திருத்தலமாகும். கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 9வது கிலோ மீட்டரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு விநாயகப்பெருமான் எழுத்தருளிய வரலாறு மிகவும் அதிசயமான ஒன்றாகும். மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படும் பேரூர் அருள்மிகு பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 6அடி உயரமும், 3அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்து வரும் வழியில் தற்பொழுது எழுந்தருளியுள்ள இடத்தில் மாட்டுவண்டியின் அச்சு ஒடிந்ததால் விநாயகப்பெருமான் விக்ரகத்தை கீழே இறக்கி வைத்து விட்டு வண்டியின் அச்சு சரிசெய்த பிறகு விக்ரகத்தை பேரூருக்கு எடுத்து செல்ல எவ்வளவோ முயன்றும் ஏற்ற முடியாமல் போனது. எனவே அப்பகுதி மக்கள் சிறிய மேடை அமைத்து...